;
Athirady Tamil News

கனடா “சங்கீத்” பிறந்த நாள் கொண்டாட்டமும்.. உலருணவுப் பொதிகள் வழங்கலும்.. (வீடியோ படங்கள்)

0

கனடா சங்கீத் பிறந்த நாள் கொண்டாட்டமும்.. உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
##########################₹₹₹₹
கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின் பிறந்த நாள் வைபகம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பம்பைமடு கிராமிய இணைப்பாளரும்” முன்பள்ளி ஆசிரியையுமான திருமதி தாரணி அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறுவர் சிறுமியர் தொடக்கம் பெரியோர் முதியோர்வரை கலந்து சிறப்பித்து கேக் வெட்டி பாட்டிசைத்து கொண்டாடினார்.

கனடாவில் வசிக்கும் செல்வன்.சங்கீத் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் சிறுவர் பெரியோர் வரை ஒன்றுகூடலில் இனிமையாக மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட, லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் வழித்தோன்றல்களில் ஒருவரான இந்திரன் என அழைக்கப்படும் கனடாவில் வதியும் திரு.திருமதி. ஆபிரகாம்லிங்கம் கவிதா தம்பதிகளின் மூத்த புதல்வனான “செல்வன்.சங்கீத்” அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் மிக மகிழ்ச்சியாக பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.. தொடர்ந்து சங்கீர்த்தின் பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது

செல்வன்.சங்கீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கீத்தின் பெற்றோர்களான திரு.திருமதி ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் கணவரை இழந்த குடும்பங்கள், தந்தையை இழந்த குடும்பங்கள் என பொருளாதார ரீதியில் வறிய நிலையில் வாழும் கிராமத்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

முதலில் பிறந்த நாள் பாட்டுப் பாடி கேக்கினை வெட்டி அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழைய கற்பகபுரம் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது இல்லம் சென்று உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளினைக் கொண்டாடும் சங்கீத் அவர்களின் பெற்றோர் வழங்கிய நிதிப் பங்களிப்புக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நன்றி கூறுவதோடு சங்கீத் அவர்கள் பல்கலையும் கற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது. .அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், தாயக உறவுகளுடன் இணைந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

04.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.