;
Athirady Tamil News

அமரர் சரஸ்வதி எட்டாம் நாள் கிரியை நினைவாக, உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள்)

0

அமரத்துவமடைந்த திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அவர்களது எட்டாம் நாள் கிரியை நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பது..
###################################

யாழ் வேலணையில் பிறந்து கனடாவில் அமரத்துவமடைந்த அமரர் திருமதி ஆறுமுகம் சரஸவதி அவர்களின் இறப்பின் பின் எட்டாம் நாள் ஆத்ம சாந்தி நிகழ்வு இன்றைய தினம் கனடாவில் நடைபெறுவதை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில், திரு.வி.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களின் ஏற்பாட்டில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வாழ்வாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்திற்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் வேலணையில் பிறந்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர் திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அவர்களின் செலவு என சொல்லப்படும் எட்டாம் நாள் பிதிர்க்கடன் கிரியை கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவரது பிள்ளைகளில் ஒருவரான “சாந்தா” என அழைக்கப்படும் திருமதி சரோஜாதேவி குடும்பத்தினர் அதாவ மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் சார்பாக.. சுவிஸில் வசிக்கும் திரு.திருமதி.”ராசன்” என அழைக்கப்படும் இராசகுலசிங்கம் .”சாந்தா” என்ற திருமதி சரோஜாதேவி குடும்பம் வழங்கிய நிதிப் பங்களிப்பில்.. வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே நான்கு தினங்களுக்கு முன்னர், அமரர்.திருமதி.ஆறுமுகம் சரஸ்வதி அவர்களின் இறுதி நிகழ்வின் போதும், இதேபோன்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அமரர் ஆறுமுகம் சரஸ்வதி அன்னையின் ஆத்ம சாந்திபெற இறைவன் சந்நிதில் அமைதியாக அமைதி கொள்ள எட்டாம் நாள் நிகழ்வு நடைபெறும் நாளில் பல்வேறு வகையில் வருமானத்தை இழந்து வாழ்வதற்கு மிகவும் சிரமப்படும் வவுனியா இறம்பைக்குளம், ராணி மில் ஒழுங்கை, சிதம்பரபுரம், கற்குளம் -4 போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளருடன் உப தலைவர் திரு.பெருமாள் சஞ்சீவன் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். உலருணவுப் பொதியினை பெற்றுக் கொண்டவர்கள் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்..

“அமரர் ஆறுமுகம் சரஸ்வதி அன்னையின் பிரிவித் துயரிலும் அதனைத் தொடர்ந்து எட்டாம் நாள் நிகழ்வில் போதும் அன்னையின் விண்ணக வாழ்வு அமைதியாய் இறைவனோடு ஐக்கியமாகி அமைதி கொள்வதற்காக வாழ்வாதார உதவியாக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள எமக்கு உலருணவுப் பொதிகளைத் தந்துள்ளனர்.. நிச்சயமாக நாங்களும் இறைவனை வேண்டுகிறோம் இந்த உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் ராசன் என அழைக்கப்படும் இராசகுலசிங்கம் அவர்களுக்கும் சாந்தா என அழைக்கப்படும் சறோஜாதேவி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அதேவேளை அம்மாவின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்” என்றனர்.

இன்றைய நாளில் கனடாவில் அமரத்துவமடைந்த அன்னை ஆறுமுகம் சரஸ்வதி அவர்களின் எட்டாம் நாள் ஆத்ம சாந்தி கிரியைகளில ஆத்மா இறைவனோடு ஐக்கியமாகி நித்திய பெருவாழ்வில் அமைதியாக இளைப்பாறி இறையோடு இரண்டரக் கலந்து பேரின்ப பெறுவாழ்வு பெற மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
05.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.