;
Athirady Tamil News

ஜேர்மன் தர்ஷான் சோபிகா “M.F” ஊடாக, நிச்சயதார்த்த கொண்டாட்டம்.,. (படங்கள் வீடியோ)

0

வரலக்ஸ்மி விரத விசேட பூசையில், ஜேர்மன் தர்ஷான் சோபிகா “M.F” ஊடாக, நிச்சயதார்த்த கொண்டாட்டம்.,. (படங்கள் வீடியோ)
#############################

ஜேர்மனியில் வசிக்கும் தர்ஷான் சோபிகா இருவரினதும் திருமண நிச்சயதார்த்தினை முன்னிட்டு வரலக்ஸ்மி விசேட பூசையும், கிராம மக்களுக்கான விசேட விருந்துபசாரமும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

மன்னார் அடம்பன், மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி.உதயகுமார் கீதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.தர்ஷான், சங்கானையைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி. தவராசா நந்தினி தம்பதிகளின் அன்புப்புதல்வி செல்வி.சோபிகா
ஆகிய இருவருக்கும் பெற்றோரின் முன்னிலையில், விரைவில் நடைபெறவுள்ள பதிவுத்திருமண மற்றும் திருமண வைபவங்களை முன்னிட்டு, “செல்வன்.தர்ஷான், செல்வி.சோபிகா” ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக வவுனியா கிராமமொன்றில் ஊர் மக்களால் விசேடமாக நடைபெற்ற விருந்துபசார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நாளில் வவுனியா கிராமமொன்றில் ஊர் மக்களால் விசேடமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டு வரலக்ஸ்மி பூசைக்கான விசேட ஏற்பாடும், அதனோடிணைந்த ஜேர்மன் தர்ஷான் சோபிகா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வினையும் முன்னிட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அதிகாலையிலே கிராம மக்கள் ஒன்றுகூடி விசேட நிகழ்வுக்கான ஆயத்த வேளைகளை செய்யத் தொடங்கினர்..

புதுமணத் தம்பதிகளாக இணையப் போகும் தர்ஷான் சோபிகா இருவரினதும் நிச்சயதார்த்த்தினை முன்னிட்டு விசேட விருந்துணவாக வடை பாயாசம் பொங்கல் கடலை அவல் .பஞ்சாமிர்தம் என களக்கட்டியது ஆலய சமையல் பகுதி. கிராம மக்கள் ஆர்வத்துடன் ஒன்று கூடி அவரவர் வேலைகளை தமது உறவுகளின் நிகழ்வாக நினைத்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூகப் பணிக்கு ஒத்துழைப்பு செய்தனர்..

பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன் குறிக்கப்பட்ட நேரத்தில் வரலக்ஸ்மி பூசை ஆரம்பிக்கப்பட்ட அதேநேரம் நிச்சயக்கப்பட்ட ஜேர்மன் தர்ஷான் சோபிகா ஆகியோரின் இல்வாழ்க்கை சிறப்புறவும், மேன்மையடையவும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கவும் விசேட பூசை இடம்பெற்றது.. தம்பதிகளின் இல்வாழ்வுக்கான சிறப்பு பூசை நடைபெற்று தட்சணை வழங்கப்பட்டு காளாஞ்சி கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டு வருகை தந்தோர்களுக்கு விசேட விருந்துபசாரம் கொடுக்கப்பட்டது. வடை பாயசத்தோடு அறுசுவை உணவு ஜேர்மன் தரஷான் சோபிகா நிச்சயதார்த்தத்தினை முன்னிட்டு அவர்களுடைய நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது. விருந்துண்ட கிராமத்து மக்கள் புதுமணைப் புகப் போகும் தம்பதிகளை வாயார வாழ்த்திச் சென்றனர்

தர்ஷான் சோபிகா தம்பதிகளின் நிச்சயதார்த்தம் நிகழ்வுக்கு வருகை தந்த வயோதிபத் தாயொருவர் நன்றி கூறுகையில் “நான் பிள்ளைகள் பெற்று பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் கண்ட நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.. உங்கள் திருமணம் இனிதாக மங்கலம் பொங்க சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.. எல்லா செல்வங்களையும் பெற்று நலமாக வாழ வாழ்த்துகிறேன்” என்றார்..

இல்லற வாழ்க்கையினை இனிமையாக இனித் தொடங்கப் போகும் நிச்சயத்தை நிச்சயதார்த்தம் மூலம் நிறைவேற்றி சந்தோசத்தில் நிலைத்திருக்கும் ஜேர்மன் தர்ஷான் சோபிகா தம்பதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு பதினாறும் பெற்று பெருவாழ்வு கண்டு சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது..

அதேவேளை தமது நிச்சயதார்த்தம் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு சமூக மக்கள் பணிக்கு ஆர்வத்தோடு நிதிப் பங்களிப்பு செய்த ஜெர்மன் தர்ஷான் சோபிகா புதுமணத் தம்பதிகளுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

19.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.