;
Athirady Tamil News

அமரர்.அம்பிகா அவர்களின் 31 ஆம்நாள் நினைவாக, சகோதரங்களினால் உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)

0

அமரர் அம்பிகா அவர்களின் 31 ஆம்நாள் நினைவாக, சகோதரங்களினால் உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)
#############################
புங்குடுதீவு கிழக்கூரைச் சேர்ந்தவர்களும், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்தவர்களுமான அமரர்கள் செல்லத்தம்பி செல்வரத்தினம் தம்பதிகளின் புதல்வி அமரத்துவமடைந்த செல்வி.அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் முப்பத்தோராம் நாள் நினைவாக அவர்களது சகோதரங்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வவுனியா மறவன்குளம் கிராமத்தில் வாழும் வயோதிபக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

புங்கையூரின் வழித்தோன்றலான அமரர்களான செல்லத்தம்பி செல்வரத்தினம் தம்பதிகளின் புதல்வியான அமரர் அம்பிகா இலங்கைத் தலைநகரில் பிறந்து வாழ்ந்து அமரத்துவமடைந்தவர். அன்னாரின் அமரத்துவமடைந்த முப்பத்தோராம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வினை முன்னிட்டு அமரர் அம்பிகா அவர்களது சகோதரர்களால் விசேடமாக இந்நிகழ்வில் வவுனியா மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் நிரந்தர யோயாளிகள், விசேட தேவைக்குட்டவர் என வயோதிபக் குடும்பங்களை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கிராமிய இணைப்பாளர் சமூகசேவகர் திரு ராதா அண்ணன் அவர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான உலருணவுப் பொதிகளையும் வீடுவீடாக சென்று வழங்கி வைத்தார்.

நாளாந்த கூலித் தொழிலாளர்களைக் கொண்ட இந்தக் கிராமம். சாதரணர வாழ்க்கை வாழுகின்ற குடும்பங்கள் வாழும் கிராமமாகும். உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இருகரம் கூப்பி தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன் அமரர் அம்பிகா அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டிக் கொண்டனர்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக சகல நடவடிக்கைகளும் முடக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமது சகோதரி அமரர் அம்பிகா அவர்களது முப்பத்தோராம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வை முன்னிட்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்குமாறு சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் அம்பிகா அவர்களது சகோகரங்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை அமரர் செல்வி அம்பிகா அவர்களின் நினைவாக தாஈயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை வழங்கிய அன்னாரின் சகோதரங்களுக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதேபோல் அமரர் செல்வி.அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் சகோதரங்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பில் புங்குடுதீவு மற்றும் வன்னிப் பிரதேசத்தில் “உலருணவுப் பொதிகள்” வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.. தற்போதைய கொரோனா முழுமுடக்கம் காரணமாக ஓரிருவாரங்களில் இவ் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆயினும் இன்றைய (நேற்று) முப்பத்தியொராம் நாளில் சகோதரர்களின் நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் என்பதுக்காக, குறிப்பிட்ட சில உலருணவுப் பொதிகள் மட்டும் நேற்று மாலை வழங்கப்பட்டது.

உலருணவுப் பொதிகளை பெற்றுக் கொண்ட மக்கள் தமது நன்றிகளை வணங்கி தெரிவித்துக் கொண்டனர்.. அத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், தாயக உறவுகளுடன் இணைந்து அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் ஆத்ம சாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது. தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு ஆத்மார்த்தமான அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.08.2021

அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் நினைவாக, உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.