;
Athirady Tamil News

நிவேதா வஜீகரன் பிறந்த நாள் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பும்.. (வீடியோ படங்கள்)

0

நிவேதா வஜீகரன் பிறந்த நாள் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பும்.. (வீடியோ படங்கள்)
##################################
சுவிஸ்வாழ் திரு.திருமதி வஜீகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி நிவேதா வஜீகரன் அவர்களின் பிறந்த நாள் தாயகத்தில் கிராமமொன்றில் வாழும் குடும்பத்து உறவுகளால் அமைதியாக கொண்டாடப்பட்டது.

சுவிஸ்வாழ் தமிழுறவான திரு.திருமதி வஜீகரன் தம்பதிகளின் செல்லமகளான நிவேதா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகளை தாயகத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கொரோனா பெருந்தொற்று காரணமாக முன்னெச்சரிக்கையுடன் அதற்கான பாதுபாப்பை கருத்திற் கொண்டு சிறுவர் சிறுமிகளை தேர்வு செய்து செல்வி நிவேதா வஜீகரன் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடியது..

செல்வி நிவேதா வஜீகரன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள் பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி நிவேதா வஜீகரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறியும் தமது மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.மிகவிரைவில் “கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதும்” அவர்களின் நிதி பங்களிப்பில் கோழிக்கூட்டுடன் கோழிக்கூடும் வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுவிஸ்வாழ் திரு.திருமதி வஜீகரன் தம்பதிகள் தங்களது செல்வப் புதல்வி செல்வி. நிவேதா அவர்களது பிறந்த நாளில் ஒன்றுகூடிய பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வழங்கிய நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறு காலத்திக்கேற்ற வகையில் தமது செல்லமகளின் பிறந்தநாளை அமைதியாக அதேவேளை காத்திரமான பங்களிப்பை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக நிதிப்பங்களிப்பு வழங்கிய செல்வி நிவேதா அவர்களின் பெற்றோரும் சுவிஸ்வாழ் வாழும் தமிழுறவுகளின் எமது சமூகநல மேம்பாடுக்கு உதவிபுரிந்த நல்லுள்ளங்களுக்கு தாயக உறவுகளுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துக்களையும்.்பெருமதிப்பார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

இன்றைய நாளில் தாயக உறவுகளோடு தனது இனிய பிறந்தநாளைக் கொண்டாடிய செல்வி. நிவேதா வஜீகரன் அவர்களுக்கு தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் பல்கலையில சிறந்து சீறும் சிறப்போடு நீண்ட ஆயுளோடும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

02.09.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.