;
Athirady Tamil News

சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்)

0

சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்)
##################################

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், தூண் பிரதேசத்தில் பிறந்து வாழும் செல்வன்.தர்சீஸ் அவர்களின் பதினேழாவது பிறந்ததினம் இன்று தாயக உறவுகளோடு மகிழ்வாக கொண்டாடப்பட்டது.

தாயக உறவினை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு சுவிஸ் நாட்டில் பிறந்து வாழ்ந்து வரும் உறவான செல்வன் தரசீஸ் அவர்களின் 17 வது பிறந்தநாளை முன்னிட்டும் எதிர்வரும் நாட்களில் தர்சீஸ் அவர்களின் தாயாருடைய பிறந்த நாளையும் முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளுடன், கோழிக்கூட்டினை வழங்கவிருந்த போதிலும் தர்சீஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று தர்சீஸ் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய தாயார் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கமைவாக தாயக கிராமமொன்றில் சிறுவர் சிறுமியர் பெற்றோர்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது தர்சீஸ் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செல்வன்.தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு எளிமையான கொண்டாடப்பட்டாலும் அதிகளமான உறவுகள் கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி தர்சீஸ் அவர்களுக்கு தமது சந்தோசமான பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

செல்வன். தர்சீஸ் அவர்களின் பிறந்த நாள் உதவியாகவும் மிகவிரைவில் அவரது தாயாரின் பிறந்ததினத்தையும் முன்னிட்டு இருவரும் இணைந்து மிகவும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தாயக ஏழைக் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாகக் கோழிக்கூடும், கோழிகளும் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு சமூகப்பணியினை தமது பிறந்த நாளை முன்னிட்டு வழங்க இருக்கின்ற செல்வன் தர்சீஸ் அவர்களுக்கும் பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் அவருடைய தாயாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக சொந்தங்களோடு தெரிவிக்கும் அதேநேரம் வாழ்வாதார உதவிகளுக்காக நிதிப்பங்களிப்பு செய்யும் தர்சீஸ் அவர்களுக்கும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது. இதுக்கான முழுமையான ஏற்பாட்டை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரும், சுவிஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவருமான சுவிஸ் தூண் மாநில பிரபல வர்த்தகர் ராஜு எனும் திரு.சுபாஸ்கரன் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

06.10.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.