;
Athirady Tamil News

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு “கிளச்சர்” வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்.. (படங்கள் வீடியோ)

0

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு “கிளச்சர்” வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்.. (படங்கள் வீடியோ)
###################################

வவுனியா   நெளுக்குளம் சூப்பி கடையடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான பாடசாலை மாணவருக்கு, மக்கள் போராட்டத்  தளபதி மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், பிரித்தானியா புளொட் கிளையின் உறுப்பினருமான லண்டனில் வசிக்கும் சின்ன முகுந்தன் என அழைக்கப்படும்  முத்துராசா முகுந்தன் அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலைமையினை கருத்திற் கொண்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக” மாணவன் நடப்பதற்கு இலகுவாக ஊன்றி நடப்பதற்கு கிளச்சரினை வழங்கினார்.

வவுனியா நெளுக்குளம் சூப்பி கடையடி எனப்படும் இடத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியான திரு தயானந்தன்அவர்களது மகனான மாற்றுத் திறனாளியான தனுசன் நடப்பதற்கு சிரமமுடைய மாணவன் மேலும் அவரால் தொடர்ச்சியாக துல்லியமாகவும் பேசுவதற்கு சிரமமுடைய மாற்றுத்திறனாளியாவார்.

விசேட பாடசாலையான ஓகான் நிறுவனம் நடாத்தும் பாடசாலைக்கு சென்று வருபவர், தற்போதைய கொரோனா காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத வறிய நிலையில் உள்ளார்..

அண்மைய கொரோனா காலச் சூழ்நிலையில் பயணத்தடை அமுல்பட்டிருந்த காலத்தில் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்யும் வகையில். மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள் கிராமமெங்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சென்றவேளையில் குறித்த மாற்றுத்திறனாளியாண தனுசனையும் அவரின் குடும்ப சூழ்நிலையினையும் அவதானித்தோம்.. அந்தவகையில் மிகவும் வறிய நிலையில் தந்தையாரின் நாளாந்த கூலி வறுமானத்தில் வாழும் தனுசனுக்கு எந்தவிதமான் மாற்றுத் திறனாளிக்குறிய உதவியினை செய்து கொடுக்க முடியாத சூழ்நிலையில் செல்வன்.தனுசனின் வாழ்க்கையினை அவதானித்தோம்.. எனவே தான் தனுசனின் தேவையான “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நிறைவேற்றித் தரும் என்ற உறுதிமொழியினை மட்டும் கூறிவிட்டு வந்தோம்.

அந்தவகையில் இன்றைய நாளில் “மக்கள் போராட்டத்  தளபதி” மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், பிரித்தானியா புளொட் கிளையின் உறுப்பினருமான லண்டனில் வசிக்கும் சின்ன முகுந்தன்  என அழைக்கப்படும்  முத்துராசா முகுந்தன் அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலைமையினை கருத்திற் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக மாணவன் நடப்பதற்கு இலகுவாக கிளச்சரினை வழங்கி வைத்தார்.

ஏற்கனவே சின்னமுகுந்தன் அவர்கள் முன்னாள் புளொட் உறுப்பினரான அமரர்.டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியான உலருணவுப் பொதிகளை  வழங்கி வைத்த அதேவேளை மீண்டும் தனுசனின் நிலையினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக” கேட்டறிந்து உடனடியாகவே தனுசன் கேட்டுக் கொண்டதற்கமைய, அவரின் விருப்பப்படி கிளச்சர் ,28.11.2021 அன்று மாலை ஐந்து மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது..

இந்நிகழ்வில் கல்வித் திணைக்கள முகாமைத்துவ உதவியாளரும் சாம்பல் தோட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருமான விஜயருபன் அவர்கள் விசேட அதீதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். அவருடன் எமது மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களான திருமதி நவரட்ணம் பவளராணி மற்றும் திருமதி பெரியண்ணன் பரிமளம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

குறித்த உதவிக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கிய லண்டன்வாழ் சின்னமுகுந்தனுக்கு நன்றியினைக் கூறுவதோடு.. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

20.12.2021

டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.