;
Athirady Tamil News

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
#################################

யாழ் புங்குடுதீவு மற்றும் வேலணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் புரூக்டோர்பில் வசிப்பவருமான திரு.சீவரத்தினம் சுதாகரன் அவர்களது இனிய பிறந்தநாள் தாயக கிராமம் ஒன்றில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. திரு.திருமதி.சுதாகரன் செல்வி தம்பதிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக” பலவிதமான சமூகப்பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருபவர்.

திரு. சுதாகரன் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்தில் சிறுவர் சிறுமியர்கள், அவர்களது பெற்றோர்கள், பெரியோர்கள் என பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடினார்கள் .

பிறந்த நாள் நிகழ்வில கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்கள் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.சுதாகரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நல்வாத்துக்களையும் தெரிவிப்பதோடு, மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொருட்களை வழங்கி வைக்க நிதிப்பங்களிப்பினை வழங்கியதற்கும் மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
31.01.2022

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.