;
Athirady Tamil News

புளொட் தோழர் பக்தனின் நினைவாக, யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள், வீடியோ)

0

புளொட் தோழர் பக்தனின் நினைவாக, யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள், வீடியோ)

தற்போதைய இலங்கை நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் முழுமையாக முடக்கப்பட்டு உள்ளதினால், யாழ் பல்கலைக் கழகத்தில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த சுமார் இருநூறு மாணவ,மாணவிகளுக்கான ஒருநேர உணவுக்கான உதவியை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) உபதலைவர்களில் ஒருவரான அமரர்.தோழர் பக்தனின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டது.

புளொட் உபதலைவர்களுள் ஒருவரும், புளொட் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான தோழர் பக்தன் எனும் அமரர். மகாதேவன் சிவநேசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புளொட் ஆதரவாளர்களான சுவிஸில் வசிப்பவர்களும், புங்குடுதீவு, மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்களுமான திரு.திருமதி.குமார் தர்ஷினி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக மேற்படி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

“அவசர கோரிக்கையை ஏற்று உடனடி உதவி செய்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும், திரு.திருமதி.குமார் தர்ஷினி தம்பதிகளுக்கும், சுவிஸ்ரஞ்சன் அண்ணாவுக்கும் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என மாணவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை
.
10.05 2022.

புளொட் தோழர் பக்தனின் நினைவாக, யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.