புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான சீருடை வழங்கல் மற்றும் மதிய போசனம் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான சீருடை வழங்கல் மற்றும் மதிய போசனம் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
ஐந்தாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம்
பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் தெய்வமே
காலத்தை வீணாக்காது கம்பீர நடையுடன் உமது
வாழ்நாளைப் போக்கி வந்தீரே
எல்லோருடனும் இனிமையாய் பழகி
எம்மையும் இனிதாய் வழி நடத்தி வந்தீர்.
உள்ளத்தை ஒருங்கிணைத்து
ஒற்றுமையை வலுப்படுத்தி
உமக்கென சில உறவுகளையும்
உருவாக்கி வந்தீரே
இவற்றையெல்லாம் செய்து விட்டு
எங்களுடன் இருக்காமல்
இறைவனின் அரவணைப்பை
எளிதில் நாடிச் சென்றதேனோ..
ஆண்டுகள் ஐந்தானாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது..
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முன்னாள் அதிபர் அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வினை முன்னிட்டு அவரது குடும்மபத்தின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்..
அமரத்துவமடைந்த அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்கள், அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய கல்லூரி, குருநாகல் மத்திய மகா வித்தியாலயம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், யாழ் ஸ்டான்லி காலேஜ் ஆகியவற்றின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றியதுடன் சமய, சமூக தொண்டராகவும் விளங்கியவர்.
அன்னாரின் ஐந்தாமாண்டு நினைவாக அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பில் அன்னாரின் குடும்பத்தினர் வழங்கிய நிதியில், முதல் நிகழ்வாக வவுனியா எல்லைக் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வன்னி எல்லைக் கிராமமான ஆசிக்குளம் பிரதேச கற்குளம் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் அவரது திதி நாளில் யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலில் மோட்ஷ அரச்சனை நடைபெற்று, தானத்தட்டு வழங்கப்பட்டதுடன், இரண்டாவது நிகழ்வாக அன்னாரின் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், யாழ் கொக்குவில் பிடாரி அம்மன் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கப்பட்டதுடன், அம்மாணவர்கள் பெற்றோர் உட்பட பொதுமக்களுக்கான மதிய போசனம் நிகழ்வும் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது அப்பாடசாலை ஆசிரியை, மற்றும் அக்கிராம முக்கியஸ்தர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா அவர்கள் விருந்தினராகக் கலந்து கொள்ள தேவார பாராயணம் பாடப்பட்டு அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அமரத்துவமடைந்த அமரர்.திரு.முருகேசு இராமலிங்கம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர்.திரு.முருகேசு இராமலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
23.05 2022.
புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான சீருடை வழங்கல் மற்றும் மதிய போசனம் நிகழ்வு.. (வீடியோ)
புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos