;
Athirady Tamil News

சுவிஸ் மோகனா ரஞ்சனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் மோகனா ரஞ்சனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

சுவிஸில் வசிக்கும் திருமதி மோகனாதேவி ரஞ்சன் அவர்களுடைய பிறந்தநாள் நேற்றாகும் .இதனை முகநூல் மூலம் அறிந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாகத்தினர், தமது சொந்த நிதிப் பங்களிப்பில், மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் உடனடியான ஒழுங்கமைப்பில் வவுனியா மருதங்குளம் பிரதேசத்தில் முன்னிட்டு “பிறந்தநாள் நிகழ்வும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்” மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் சுவிஸில் வசிக்கும் ரஞ்சன் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் இரண்டாவது மருமகளுமான நெடுந்தீவு, வவுனியா ஆகிய இடங்களைப் பூர்வீமாகக் கொண்டு சுவிஸில் வசிக்கும் திருமதி.மோகனாதேவி ரஞ்சன் அவர்களின் நேற்றைய பிறந்தநாளை முன்னிட்டு இக்கற்றல் உபகாரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா “மருதங்குளம்” பிரதேசத்தில் அப்பிரதேச மாணவர்கள் சிலரும், அக்கிராம மக்கள் சிலரும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு திருமதி மோகனாதேவி ரஞ்சன் அவர்களது சார்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்ற இலங்கை நிர்வாகத்தினரின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் சுவிஸில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி மோகனாதேவி ரஞ்சன் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துகிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

29.06 2022.

சுவிஸ் மோகனா ரஞ்சனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.