;
Athirady Tamil News

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################

யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த முருகனடியாருமான ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. குறிப்பாக வேறுவேறு கிராம மக்களுக்கு உதவுமாறு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் கேட்டதுக்கு இணங்க, இந்நிகழ்வானது உடனடி ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேற்படி இன்றைய நிகழ்வானது புளொட் அமைப்பின் ஆரம்பகால மூத்த உறுப்பினரான தோழர்.ஜெஸ்மின் எனும் திருமதி ஹென்றிபெரேரா ஜெயபாலினி அவர்களிடம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, உடனடியாக அவரினால் ஏற்பாடு செய்யப்பட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதேவேளை நிகழ்வின் ஆரம்பத்தில் தோழர்.ஜெஸ்மின் எனும் திருமதி ஹென்றிபெரேரா ஜெயபாலினி அவர்கள் “மேற்படி நிகழ்வானது அவசரமாக திட்டமிடப்பட்டு நடைபெற்றது என்பதுடன், தற்போது தேர்தல் காலமாக இருந்த போதிலும், இதில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லையெனவும்” கூறி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அந்த வகையில் இன்றைய தினம் வவுனியா செட்டிக்குளம் கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராம பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர்.

இவர் “மாணிக்கதாசன் நற்பணிமன்ற” நிர்வாகசபை உறுப்பினர் என்பதினால், மன்றத்தின் நிர்வாகத்தின் நிதிப் பங்களிப்பில், பிறந்தநாள் கேக் வெட்டி, வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை ராஜு எனும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதேவேளை ராஜூ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், பெறுமதியான உலருணவுப் பொதிகளும், அரிசிப் பொதிகளும், உலருணவுகளும் வழங்கப்பட்டதுடன், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் அக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன் நிகழ்வை உடனடியாக ஒழுங்கு செய்த புளொட் அமைப்பின் ஆரம்பகால மூத்த உறுப்பினரான தோழர்.ஜெஸ்மின் எனும் திருமதி ஹென்றிபெரேரா ஜெயபாலினி அவர்கள் வாழ்த்துரையின் போது, “தம்பி சுபாஸ்கரன் சிறப்பாக நீடூழி வாழ்வதுடன், அவரும், அவரது குடும்பத்தினரும் நோய்நொடியின்றி வாழ வாழ்த்துவதுடன் அவர்கள் செய்த இவ்வுதவிக்கு மனதார நன்றி தெரிவிப்பதுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இதுபோன்ற சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக செய்ய வேண்டும்” எனவும் வாழ்த்தினார்.

இதேவேளை திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு வழங்கிய வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு. தர்மலிங்கம் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

(திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்த நாளை முன்னிட்டு மற்றுமோர் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.. இதுகுறித்த செய்தி படங்கள் வீடியோக்களுடன் தொடரும்)

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.01.2023

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.