;
Athirady Tamil News

மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)

0

மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)

இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் மிகுந்த முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருந்த காரணத்தினால் அங்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், மற்றும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிர்வாக சபையின் முடிவுக்கு இணங்க “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் நான்கு வருடத்துக்கு முன்னர் யாவும் இயந்திரங்கள் மூலம் முற்றாக அழிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன், கட்டம்கட்டமாக பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முற்றாகத் திருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன்,

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு அதாவது “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்”

“பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்” போன்றவை அமைக்கப்பட்டதுடன்.. கடந்த மூன்று வருடத்துக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக யாழ். தொல்லியல் திணைக்களம் ஊடாக மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

ஆயினும் “பெருக்குமர சுற்றாடல்” மீண்டும் மிகுந்த முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருப்பதைக் கண்டுணர்ந்து, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவரான சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, புங்குடுதீவு மக்களிடம் அவர் இதுகுறித்து பகிரங்கமாக வாட்ஸாப் ஊடாக அறிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரும், ஊர் மீது மிகுந்த பற்றுக் கொண்ட மண்ணின் மைந்தனான புங்குடுதீவில் பெருங்காடு, இறுப்பிட்டி ஆகிய பிரதேசங்களைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் பிரதேசத்தில் வாழ்பவர்களுமான “பிறேம், சுஜி” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், திரு.திருமதி.பிறேம்குமார் சுஜிதா தம்பதிகள் சார்பாக வழங்கப்பட்ட நிதி ஊடாக புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பின் ஆரம்பவேலை முதல்கட்டமாக நடத்தப்பட்டது.

முதல் இரண்டு நாட்களாக இயந்திரம் மூலமும், பின்னர் அடுத்த மூன்று நாட்களாக மனித உழைப்பின் மூலமும் அதாவது சுமார் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்படட செயற்பாட்டின் மூலம் முழுமையாக முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடு அழிக்கப்பட்டு முழுமையாக புனரமைக்கப்பட்டது.

இதேவேளை மேற்படி “பெருக்குமர சுற்றாடலைச் சுற்றி, மீண்டும் புதிய வர்ணம் பூசுதல், இருப்பிடக் கதிரைகளை இடம்மாற்றி வர்ணம் பூசுதல், வட்டக்கதிரைகளின் குடில்களை மீளமைப்பது, கிணறை தூர்வாரி மீள புனரமைப்பது, மலசல கூடத்தை மீண்டும் புனரமைப்பது, வாசலில் இருந்து பெருக்குமரம் வரையான நடைபாதை புதிதாக கல்லினால் அமைப்பது, அத்துடன் குறிப்பாக காணியில் எல்லை அமைத்து கல்தூண்கள், முள்கம்பி கொண்டு வேலி அமைத்தல், போன்ற பல விடயங்களை செய்வதென நாம் முடிவெடுத்து சிலரிடம் கதைத்த போது,..

சுவிஸ் ஒன்றிய உபதலைவரும், “புங்குடுதீவு மக்கள் செல்வனுமான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வதியும் அண்மையில் கலாநிதி பட்டம் பெற்ற டொக்ரர்.திரு.சஞ்சீவ் லிங்கம்,
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய செயலாளரும் “சமய, சமூக செயற்பட்டாளருமான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் புர்க்டோர்ப்பில் வதியும் திரு.திருமதி.செல்வி சுதாகரன், ஆகியோருடன்

ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரும், சமூகத் தொண்டில் ஆர்வம் கொண்டவரும், “ஊர்ப்பற்றாளருமான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வதியும் திரு.சதாசிவம் பன்னீர்செல்வம்

ஒன்றிய உறுப்பினர்களில் ஒருவரும், “ஊர்ப்பற்றாளருமான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் சுமிஸ்வால்டில் வதியும் திரு.நல்லையா கேதீஸ்வரன்

ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரும், “ஊர்ப்பற்றாளருமான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் புர்க்டோர்ப்பில் வதியும் திரு.பாலசிங்கம் தயாபரன்

ஒன்றிய உறுப்பினர்களில் ஒருவரும், “ஊர்ப்பற்றாளருமான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் காஸ்ளெயில் வதியும் திரு.நல்லையா யோகன்,

வந்தோரை உபசரித்து அன்புடன் நேசிக்கும் நற்பண்பாளரான புங்குடுதீவு இறுப்பிட்டி, மற்றும் கிழக்கூரைச் சேர்ந்த அமரத்துவமடைந்த அமரர் அரிதாஸ்மாமா சார்பில் அன்னாரின் மகனும், ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவருமான “ஊர்ப்பற்றாளரான” புங்குடுதீவு இறுப்பிட்டியைச் சேந்தவரும், சுவிஸ் பாசலில் வதியும் திரு. அரிதாஸ் பிரதீபன்,

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய முன்னாள்த் தலைவரும், ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவருமான “ஊர்ப்பற்றாளரான” புங்குடுதீவு மடத்துவெளியைச் சேந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வதியும் ரவியண்ணர் எனும் திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன்,

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பொருளாளரும், பல கல்வி, சமூகத் தொண்டுகளை செய்பவரும் ஊர்ப்பற்றாளருமான புங்குடுதீவு வீராமலையைச் சேந்தவரும், சுவிஸ் பேர்னில் வதியும் லுக்ஸ் அண்ணர் எனும் திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன்,

ஆகியோர் நிதிப் பங்களிப்பை வழங்கி மேற்படிப்பு புனரமைப்பை வழங்கி புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” சுற்றாடல் மீண்டும் புதுப் பொலிவுடன், மிளிரச் செய்து உள்ளார்கள் என்பது சிறப்பான விடயமாகும்.

இதனைத் தவிர புங்குடுதீவின் மண்ணின் மைந்தரும், இலங்கை ஜனநாயகக் குடியரசு ஜனாதிபதியின் செயலாளர்களில் ஒருவருமாகிய திரு.இலடசுமணன் இளங்கோவன் அவர்களின் ஆலோசனையிலும்,
புங்குடுதீவின் மண்ணின் மைந்தரும், சமாதான நீதிவானுமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும்,
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவரான திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஆலோசனை, திடடமிடல், கண்காணிப்பு, நிதிப் பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையிலும்,
கட்டிடக் கலைஞரான திரு.வனோஜன் அவர்களின் முழுமையான வேலைப்பாட்டிலும் மேற்படிப்பு பெருக்குமரம் சுற்றாடல் மிகவும் சிறப்பாக புனரமைக்கப்பட்டு உள்ளமை புங்குடுதீவுக்கே பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் ஊடகப் பிரிவு.
வீடியோ வடிவமைப்பு – சமூகம் ஊடகம்

*******************************************

புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு (படங்கள்)..

இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான “புங்குடுதீவு பெருக்குமரம், மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரைச் சூழல்” புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஓன்றியத்தினரால் பல இலட்சங்கள் செலவு செய்து அண்மையில் பொதுமக்களின் பொழுதுபோக்கும் சூழலாகவும் மாற்றி அழகுபடுத்திய புங்குடுதீவு பெருக்குமரச் சூழலை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடனும், அழகுபடுத்தும் நோக்குடனும் மேற்படி இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களால் இன்றையதினம் சிரமதானப் பணி மூலம் அழகுபடுத்தினர்,

சமய சமூக பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது முன்னுதாரணமாக கருதப்படுகிறது. கொம்மாபிட்டி அறநெறிப் பாடசாலை இயக்குனர் திரு.சதாசிவம் வைகுந்தராசா அவர்களின் அனுமதியோடு அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்களின் வழிகாட்டுதல்களோடும் சிறப்பான பணி இன்று தொடங்கப்பட்டது.

இன்றைய சிரமதானப்பணியில் ஈடுபட்ட மாணவச்செல்வங்களுக்கான சிற்றுண்டி மற்றும் குளிர்பானத்துக்கான நிதி அனுசரணை வழங்கியிருந்தார்கள் திரு திருமதி வைரவநாதன் திலகவதி தம்பதியினர் (புங்குடுதீவு – பிரான்ஸ்) என்பதுடன் அவர்களுக்கும், இதுக்கான ஒழுங்கை மாதத்தில் ஒன்று அன்றில் இரண்டு முறை மேற்கொள்வதாக புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கு உறுதிமொழி தந்தது போல் அதனை நடைமுறைப்படுத்திய இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர் அண்ணா சின்னத்தம்பி எனும் திரு. பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களுக்கும் நன்றி.

தகவல்.. – புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய ஊடகப் பிரிவு.

புதுப் பொலிவுடன் புங்குடுதீவின் அடையாளமாக புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்குமரம்” (புதிய வீடியோ)

புங்குடுதீவு அழகுமிகு தோற்றம் & சுவிஸ் ஒன்றிய செயற்பாடு.. -ஆகஸ்ட் 2020

You might also like

Leave A Reply

Your email address will not be published.