;
Athirady Tamil News

இந்திய மொழிகளை ஊக்குவிக்கவே தேசிய கல்விக் கொள்கை- பிரதமர் மோடி பேச்சு..!!

0

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு விழாவில் ர`. 31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் மேடையில் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி:-

தமிழக மக்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிறந்து விளங்குகிறார். நான் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் மேலும் ஒரு அத்தியாயம் இந்த விழா. தற்போது தொடங்கப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமான உலகத்தரம் வாய்ந்த திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன.

சிறப்பான சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, அந்த துறை சார்ந்த திட்டங்கள் அனைத்தும் அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள சேவை கிடைக்கும்படி செயல்படுகிறோம். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தற்போதைய நிலை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். இந்தியா, இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் அளித்து வருகிறது.

ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.