;
Athirady Tamil News

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஷ்வரன் நம்பூதிரி நடை திறக்கிறார். இன்று மாலை பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை புதிய தந்திரியாக கண்டரரு ராஜிவரரு பொறுப்பேற்பார். அதன்பின்பு ஆவணி மாத 1-ந்தேதியான நாளை நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம் ஆகியவை நடைபெறும். இதன்பின் கோவிலின் கிழக்கு மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜிவரரு தலைமையில் கணபதி ஹோமம் நடைபெறும். இதன்பின்னர் லட்சார்ச்சனையும் நடத்தப்படும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் அஷ்டாபிஷேம், உதயாஸ்தமன பூஜை,களபாபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறும். 21-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஓண பண்டிகை பூஜைகளுக்காக செப்டம்பர் 6-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.