;
Athirady Tamil News

பணப் பரிசு வென்றதை கவனிக்காது மறந்து போன அதிர்ஷ்டசாலி

0

கனடாவில் பணப் பரிசு வென்றதனை கவனிக்காது மறந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் மார்க்கம் பகுதியில் வசிக்கும் பீட்டர் ஹெட்ஜ்காக் என்பவர் மார்ச் மாதத்தில் வென்றிருந்த $1 மில்லியன் Lotto 6/49 Gold Ball Draw பரிசை மறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லொத்தர் சீட்டு நிறுவனம் பணப் பரிசு வென்றமை தொடர்பில் மின்னஞ்சல் மூலம் நினைவூட்டியுள்ளது. இந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து குறித்த நபர் பணப்பரிசினை வென்றுள்ளார்.

பரிசு வென்றதாக முதலில் கிடைக்கப் பெற்ற மின்னஞ்சலை தாம் பார்க்கவே இல்லை,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மின்னஞ்சல் வந்தபோதுதான் எனக்கு உண்மையில் நான் வெற்றிபெற்றதை உணர்ந்தேன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த மின்னஞ்சலைப் படித்த பிறகும் ஹெட்ஜ்காக் தன் வெற்றியில் முழுமையாக நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஹெட்ஜ்காக், ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.