;
Athirady Tamil News

ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

0

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தாக்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜே.பொல்வின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரியர்களுக்கு நடைபெறாதவாறு உரிய திணைக்களங்கள், கல்வி சமூகம் பாடசாலை சமூகம் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சேவை சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர் மீது அதிக நம்பிக்கை கொண்டு மாணவர்களை சீராக நடைமுறைப்படுத்த கற்பித்தல் செயற்பாடுகளில் ஈபடும்போது இ‌த்தகைய செயற்பாடுகளை ஏற்கமுடியாது.

தற்காலத்தில் போதைப் பொருள்களுக்கான பிரச்சனைகள் காணப்படுகின்ற காரணத்தால்
கழிப்பறையில் அதிக நேரம் மாணவன் காணப்பட்டதால் சந்தேகம் கொண்டு கண்டித்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் மாணவனின் தந்தை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.