;
Athirady Tamil News

புடினுடன் தொலைபேசி அழைப்பு… உக்ரைன் குறித்து ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலம்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதன் பின்னர், உக்ரைனுடன் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை என டொனால்டு ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார்.

உடனடி அமைதிக்கு
சுமார் ஒரு மணி 15 நிமிடங்கள் நீண்ட உரையாடலில், ரஷ்யாவின் விமானத் தளங்கள் மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதல்கள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய விமானப்படைக்கு உக்ரைன் ஒரு பேரதிர்ச்சி தரும் அடியை அளித்த நிஉலையில், புடின் தற்போது பழிவாங்கத் துடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, ரஷ்யா மீது உக்கிரத் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்ததை அடுத்து உடனடியாக ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளதும், இரு நாடுகளுக்கும் இடையேயான மறைமுகத் தொடர்பை அம்பலப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் பதிவு செய்கின்றனர்.

அது ஒரு நல்ல உரையாடல், ஆனால் உடனடி அமைதிக்கு வழிவகுக்கும் உரையாடல் அல்ல என்று ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, உக்ரைன் அளித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கு பதிலடி உறுதி என புடின் குறிப்பிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இதுவரை எதிர்கொள்ளாத உக்கிரத் தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு பழிவாங்கும் தாக்குதல் தேவையற்றது என ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆபரேஷன் Spiderweb

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து பேசி வரும் ட்ரம்ப் உண்மையில் இதுவரை அக்கறையுடன் செயல்படவில்லை என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

உக்ரைனுக்கு என இதுவரை செலவிட்டுள்ள தொகையை அங்குள்ள அரியவகை தாதுக்கள் மூலமாக மீட்டெடுக்க திட்டமிடும் ட்ரம்பால், ஒருபோதும் போர் முடிவுக்கு வராது என்றே பலரது கருத்தாக உள்ளது.

நீண்ட 18 மாதங்கள் ரகசியமாக திட்டமிட்டு ஆபரேஷன் Spiderweb என்ற நடவடிக்கை ஊடாக ரஷ்யாவின் பல்வேறு விமானத் தளங்கள் மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியானார்.

ஆனால் எந்த நேரத்திலும் ரஷ்யா பதிலடி அளிக்கும் என்பதை நிபுணர்கள் பலர் எச்சரித்திருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது ஜனாதிபதி ட்ரம்பும் ரஷ்ய பதிலடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.