சித்தப்பாத்தி மனிதப் புதைகுழி: 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம், 5 மீட்பு – நாளைய தினம் நீதிமன்றில்!
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்தார்.
யாழ் – செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று இரண்டாம் கட்டத்தின் நான்காம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா அவர்களது கண்காணிப்பின் கீழ் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெற்றது.
இதன் போது
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப் புதைகுழி வழக்கு நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் திறந்தமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன் போது குறித்த சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியாக மன்று அறிவிக்கவுள்ளது. இதன் பின்னர் அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெறும்.


