;
Athirady Tamil News

எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

0

பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது.

பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன.

பேரீச்சம் பழம் இரத்தசோகையை போக்கும் திறன்கொண்டதாகும். அத்துடன் முடி உதிர்வையும் தடுக்கிறது. மேலும், ரிபோப்ளோவின், நியாசின், போலேட், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற சத்துக்களை கொண்டது.

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மலச்சிக்கல் நீங்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுவதால் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.

இதில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இது இருக்கிறது. நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்கவும் செய்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.