;
Athirady Tamil News

கல்முனை பிரதேச முக்கிய விடயங்கள் தொடர்பில் ஹரீஸ் எம்.பியின் பங்கெடுப்புடன் முக்கியத்தார்கள் கூடி ஆராய்வு !

0

கல்முனை பிரதேச முக்கிய விடயதானங்கள், தேவைகள் மற்றும் அரசினால் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள், கொள்கை பிரகடனங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் நெறிப்படுத்தலில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு கல்முனை பிராந்திய விடயங்கள், அரசினால் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள், கொள்கை பிரகடனங்கள், கல்முனையின் எதிர்கால நடவடிக்கைகள், வட்டாரபிரிப்புக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார். மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் மற்றும் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரியபள்ளிவாசலின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனையான்ஸ் போரம் அமைப்பின் பிரதிநிதிகளான இப்திகார் றிசாத் செரீப், எம். முபாரிஸ், கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் எம்.எம். நஸீர் ஹாஜி போன்ற பலரும் கல்முனை பிரதேச பிரச்சினைகள், தேவைகள், முரண்பாடுகளும் தீர்வுகளும் தொடர்பில் கருத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ.சத்தார், எம்.எஸ்.எம். நிஸார், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், சட்டத்தரணி ரோஷன் அக்தர், ஏ. ஹலீலுர் ரஹ்மான், முன்னாள் உறுப்பினர்களான எம்.எச்.எம்.ஏ. மனாப், ஏ.எம். றியாஸ், கல்முனை பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர், கல்முனை பிரதேச செயலக மற்றும் கல்முனை மாநகர சபை உயர் அதிகாரிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள், கல்விமான்கள், பிரதேச முக்கிய சிவில் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதானிகள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதுபோன்ற கலந்துரையாடல்கள் எதிர்வரும் காலங்களில் மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலாவனை போன்ற பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.