;
Athirady Tamil News

மெட்டா வெரிஃபைடு சேவை வெளியீடு – கட்டணம் எவ்வளவு தெரியுமா? !!

0

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. புதிய கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற முடியும். முன்னதாக இதே போன்ற சேவையை எலான் மஸ்க்-இன் டுவிட்டர் அறிமுகம் செய்தது.

மெட்டா வெரிஃபைடு சேவை பயனர்களுக்கு புளூ பேட்ஜ் மூலம் அக்கவுண்ட்களை அரசு அடையாள அட்டை மூலம் வெரிஃபை செய்கிறது. இதற்கான கட்டணம் வெப் வெர்ஷனில் மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் மாத கட்டணம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாத வாக்கில் இந்த சேவைக்கான டெஸ்டிங் துவங்கிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற சேவைகளிலும் இதேபோன்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய சேவையின் மூலம் சமூக வலைத்தள நிறுவனங்கள் வருவாய் ஈட்ட துவங்கி இருக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது. முறையான அரசு அடையாள அட்டையுடன் மாத சந்தா செலுத்தும் பட்சத்தில் வெரிஃபைடு வசதி வழங்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.