;
Athirady Tamil News

வீட்டின் காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி நபர் குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!!

0

வீட்டின் அழைப்பு மணியை அடித்து குறும்புத்தனம் செய்த 3 சிறுவர்களை கொன்றதாக இந்திய வம்சாவளி நபர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வரும் அனுராக் சந்திரா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது வீட்டின் அழைப்பு மணியை அடித்து 3 சிறுவர்கள் குறும்புத் தனம் செய்துள்ளனர். இதனால் எரிச்சல் அடைந்து வீட்டுக்குள் இருந்து வௌியே வந்த அனுராக் சந்திரா, அந்த சிறுவர்கள் சென்ற காரை துரத்தி சென்றுள்ளார். சிறுவர் சென்ற காரை தனது காரால் மோதினார். இதில் காரில் இருந்த 3 சிறுவர்களும் பலியாகினர். “ஆனால் சிறுவர்களை கொலை செய்யும் நோக்கில் அவர்களை பின்தொடரவில்லை.

சிறுவர்களின் கார் மரத்தில் மோதிய விபத்திலேயே 3 பேரும் இறந்தனர்” என்று அனுராக் சந்திரா கூறியுள்ளார்.கடந்த 2020 ஜனவரி 19ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது அனுராக் சந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நியூயார்க் நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவிக்கவில்லை. இந்த வழக்கில் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாக அனுராக் சந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.