;
Athirady Tamil News

சற்றும் எதிர்பாராத மரண மடி..! தலையெழுத்தை மாற்றிய அமெரிக்கா !!

0

நவீன கால போரியல் முறை என்பது பெரும்பாலும் இலத்திரனியல் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

அதாவது, எதிரியின் தகவல்களை எதிரிக்குத் தெரியாமல் அபகரிக்கும் யுத்த பொறிமுறை இதுவாகும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், இந்த இலத்திரனியல் யுத்தம் என்கிற தனியானதொரு யுத்த முறைமை தற்பொழுதைய நவீன தொடர்பூடக காலத்தில் உருவாகிவிட்டது.

இலத்திரனியல் ரீதியாக ஈராக் மீது மிகப்பெரிய ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் நோக்கத்தோடு அமெரிக்கா ஆரம்பத்தில் இலத்திரனியல் ரீதியான தகவல்களையே திரட்டியது.

இதற்காக அமெரிக்காவினால் RC – 134 Revert Joint எனும் விமானம் உருவாக்கப்பட்டதுடன், இந்த வகை விமானங்கள் இரவு பகலாக ஈராக் கட்டமைப்பின் இலத்திரனியல் தகவல்களை திரட்டத் தொடங்கியது.

எதிரியின் தகவல்களை திரட்டுவது மட்டுமில்லாமல் எதிரியின் ஒட்டுமொத்த தொடர்பாடலையும் குழப்பி அவர்களை நிலைகுலைய வைப்பதும் இதன் நோக்கமாக இருந்தது.

ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பெரிதும் உதவும் வகையில், RC – 134 Revert Joint விமானம் தனது பணியை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது.

இதன் பின்னர், ஈராக் மீது அமெரிக்கா ஆரம்பித்த படை நடவடிக்கையால், சற்றும் எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகளில் சதாம் ஹுசைன் உள்ளிட்ட ஈராக் அதிகாரிகள் உறைந்துபோயினர்.

ஈராக் படைகளை திணறவைக்கும் அளவிற்கு அமெரிக்காவின் இலத்திரனியல் போரியல் முறையின் திட்டங்கள் இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.