;
Athirady Tamil News

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க.. டிரம்ப் அறிவுரை

0

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், மனைவியிடம் அடிவாங்கும் விடியோ வெளியானது குறித்து நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

விமானத்திலிருந்து கீழே இறங்கும்போது, பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு, மேக்ரானை, அவரது மனைவி ப்ரிக்கிட் அடித்ததாகக் கூறப்படுகிறது.

எதிர்பாராதவிதமாக, விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது நடந்த இந்த சண்டையின் ஒரு பகுதி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு, அது எப்போதும் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

அதாவது, வியத்நாமுக்கு தனது மனைவியுடன் சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முகத்தில் அவரது மனைவி ப்ரிகிட் அடித்து காயப்படுத்துவது போன்ற காட்சிகள் மேற்கண்ட விடியோவில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில்தான், இந்த விடியோ காட்சிகள் குறித்து வெள்ளிக்கிழமை தனது ஓவல் அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி அவரது நலத்தை விசாரித்ததாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் செய்தியாளர்களுக்கு உறுதி அளித்தார்.

இதையும் படிக்க.. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

அவர்கள் இருவருமே மிகச் சிறந்தவர்கள், எனக்கு அவர்களை மிக நன்றாகவே தெரியும். ஆனால், அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை என்றார் டிரம்ப். பொதுவாக எதையுமே தெரியாது என்று ஒப்புக் கொள்ளாத டிரம்ப் முதல் முறையாக இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

இந்த உரையாடலை நகைச்சுவையாக முடிக்க நினைத்த டொனால்ட் டிரம்ப், ஒரு உலகத் தலைவர், மற்ற உலகத் தலைவருக்கு அளிக்கும் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளவும், எப்போதும் கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும் என்று கூறியதைக் கேட்டு அவரும், அங்கிருந்தவர்களும் பலமாக சிரித்தனர்.

முன்னதாக, மனைவியிடம் அடிவாங்கியதாக வெளியான விடியோ குறித்து மேக்ரானே விளக்கமும் கொடுத்துள்ளார். அதில், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டலும் கேலியும் செய்துகொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.