;
Athirady Tamil News

யாழில் மண்கலந்த குடிநீர் விநியோகம்

0

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதாவது யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமாக நீர் வீடுகளுக்கு செல்கிறது.

நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் வீதியில் உள்ள வீடுகளுக்கு வழமையான குழாய் நீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிகளில் மண் கலந்த நீர் நிரப்பப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டுக்காரர் ஒருவர் நீரை போத்தலில் எடுத்த போது சிவப்பு நிறமாக காட்சி அளித்ததை அவதானித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது குழாய் நீரில் ஏற்பட்ட பழுது காரணமாக திருத்த வேலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் திருத்த வேலையின் போது மண் உட்புகுந்த காரணத்தினால் அருகில் இருக்கும் வீடுகளின் குடி நீரில் சிவப்பு மண் கலந்த நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்ட போது குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.