;
Athirady Tamil News

பலாலி கிழக்கு விடுவிக்கப்படும் சாத்தியம்

0
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஒரு பகுதி காணி யை விடுவிக்க இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
யாழ் . மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதன் போது, கடந்த 36 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அதில் குறிப்பாக பலாலி வீதிக்கு கிழக்கு புறமாக காணப்படும் பலாலி கிழக்கு பகுதி மற்றும் பருத்தித்துறை – கீரிமலை வீதியில் கடற்கரை பக்கமாக இருக்கும் பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் , இராணுவ தரப்பினர் சாதகமான பதில்களை தந்தமையால் , மிக விரைவில் அவற்றை விடுவிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.