;
Athirady Tamil News

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொலை?

0

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்கு, பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இஸ்ரேல் அதன் விமானப் படைகள் மற்றும் முன்கூட்டியே அந்நாட்டினுள் கடத்தப்பட்ட ராணுவ ட்ரோன்கள் மூலமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதல்களில் ஈரானின் சில முக்கிய ராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஈரானின் கட்டாம் அல் – அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெனரல் அலி ஷாத்மானி என்பவரைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஈரானின் தரப்பில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி ஜெனரல். கோலம்அலி ரஷித் என்பவர் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், அவரது பொறுப்புகள் அனைத்தும் ஜெனரல். அலி ஷாத்மானியிடன் ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி ஒப்படைத்து அவரைப் பதவி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.