;
Athirady Tamil News

இந்த ஊருக்கு வரவேண்டாம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

0

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீமுரே பிரதேசமானது கண்டி மாவட்டத்திற்கும் மாத்தளை மாவட்டத்திற்கும் இடையிலான எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்ககூடிய பிரதேசமாகும்.

வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஹுன்னஸ்கிரிய-மீமுரே சாலையில் உள்ள கைகாவல பாலம் வீதி மேம்பாட்டு ஆணைக்குழுவால் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது 3 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.