;
Athirady Tamil News

2.5 மில்லியன் டொலர் மாயம் : விசாரணைகள் குறித்து வெளியான தகவல்

0

அவுஸ்திரேலியாலின் ஏற்றுமதி நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2.5 மில்லியன் டொலர் மாயமானது தொடர்பான விசாரணைகள் இதுவரையில் நிறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றம்
இந்தநிலையில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் திறைசேரியால் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறித்த விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் 4 அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவரான ரங்க நிஷாந்த மர்மமான முறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.