;
Athirady Tamil News

ரஷியாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை? என்ன நடந்தது?

0

ரஷியாவில் அதிபர் விளாதிமீர் புதினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரஷிய அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ரோமன் ஸ்டாரோவாய்ட். அவரை அதிபர் புதின் பதவியிலிருந்து நீக்கி திங்கள்கிழமை(ஜூலை 7) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரஷியாவில் உக்ரைன் நடத்திய வான் வழி ட்ரோன் தாக்குதல்களால் விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அவர் ஆளுநர் பதவி வகித்தபோது அரசு பணத்தை முறைகேடாக செலவழித்தாதகவும் குற்றச்சாட்டு உள்ளது. ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கிவிட்டு அப்பதவியில், அவருக்கடுத்த நிலையில் பொறுப்பு வகித்த ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த திங்கள்கிழமை(ஜூலை 7) முன்னாள் அமைச்சர் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிறிய துப்பாக்கியால் சுட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்தபடி அவரது காரில் இருந்து அவரது உடல் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அவருக்கு வயது 53.

எனினும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் அவரது மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.