;
Athirady Tamil News

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

0

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து மிகச் சரியாக 6 நிமிடங்கள் 23 வினாடிகளுக்கு மறைத்தபடி நிற்குமாம். இதுதான், உலகிலேயே மிக நீண்ட நேர சூரிய கிரகணமாகக் கருதப்படுகிறது.

இது வழக்கமான ஒரு சூரிய கிரகணமாக இருக்காது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கும். அதாவது, இரு வெவ்வேறு இடங்களில் சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்கும் பூமியும், நிலவும், சூரியனின் நேர்க்கோட்டில் வரும். பூமிக்கு இடையே வரும் நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கிறது. இது அதிக மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் தெரியும். இதனை ஏராளமானோர் நேரில் காணப்போகிறார்கள்.

ஆனால் என்ன? 2025 அல்லது 26ஆம் ஆண்டில் ஆண்டில் நிகழப்போவதில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாவதைப் போல வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி எந்த கிரகணமும் நிகழப்போவதில்லையாம்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகமே இருளில் மூழ்கப் போவதாக நாசா அறிவித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை. அன்றைய நாளில் உலகம் இருளில் எல்லாம் மூழ்காது. அதனை காண 2027 வரை காத்திருக்க வேண்டும். பலரும் அந்தநாளை தங்களது காலாண்டில் குறித்து வைத்துக் கொண்டு, அதனை நேரில் காண உலக நாடுகளுக்குப் பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.

இது மிக நீண்ட சூரிய கிரகணமாக மாறுவது எப்படி?

சூரியனை விடவும் நிலவு மிகவும் சிறிது என்பதால், மிக நீண்ட நேர சூரிய கிரகணமானது நேரிடுவது அபூர்வம். அந்த வகையில், 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிலவு, பூமிக்கு சற்று அருகில் இருக்கும். இதனால் வழக்கமான அளவைவிட பெரிதாகத் தெரியும். சூரியனிடமிருந்து பூமியின் தொலைவு சற்று அதிகமாக இருக்கும். இதனால் சூரியன் சற்று சிறியதாகத் தெரியும். இந்த பொருத்தமான காரணிகளால், சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கிறது. அதுவும் நீண்ட நேரத்துக்கு அது நீடிக்கிறது.

இந்தியாவில் இது பகுதியாகவே தெரியும். வடமேற்கு மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கோவாவில் காண முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சூரியன் 10 முதல் 30 சதவீதம் மறைவதைப் பார்க்கலாம். சூரிய கிரணம் தொடங்கும் நேரம் இந்திய நேரப்படி மாலை 4 மணி என்பதால் முழுமையாக சூரிய கிரகணத்தைக் காண்பதற்குள் சூரியன் இந்தியாவிலிருந்து மறைந்துவிடும்.

இந்த சூரிய கிரகணம் 4 மணி முதல் 6 மணி வரை சுமார் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கிறது. இதனை நேரடியாகப் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.