;
Athirady Tamil News

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம்

0

அமெரிக்க ராணுவத்தில் மாவென் என்ற செயற்கை நுண்ணறிவு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

மாவென் செயற்கை நுண்ணறிவு
அமெரிக்க ராணுவம் தங்கள் இராணுவ நடவடிக்கையில் புதிய இணைப்பாக மாவென்(MAVEN) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) அமைப்பை அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அமைப்பாக அங்கீகரிப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான Palantir, எதிரிகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் Project Maven என்ற திட்டத்தின் கீழ் புதிய AI அமைப்பை உருவாக்கியுள்ளது.

இவை இனி அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் மாவென் AI திறன்கள்
இந்த புதிய மாவென் AI தொழில்நுட்பமானது, சில வினாடி பொழுதில் செயற்கைக்கோள்கள், டிரோன்கள், ரேடார்கள் மற்றும் சென்சார்களில் இருந்து கோடிக்கணக்கான தகவல்களை ஆராய்ந்து துல்லிய பதில்களை வழங்கும்.

இதன் மூலம் எதிரிகளின் ஆயுதக் கிடங்குகள், ராணுவ வாகனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை சில வினாடிகளில் ஆய்வு செய்து துல்லியமாக அடையாளம் காட்டும்.

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஏற்கனவே இந்த ஏஐ மாதிரியை சோதித்து அதில் வெற்றியும் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த MAVEN AI அமைப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக செயல்படும் என்று தெரியவந்துள்ளது.

மேலும், MAVEN AI திட்டத்திற்கு முழு அங்கீகாரம் கிடைத்து இருப்பதால், இனி அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் இதற்காக மிகப்பெரிய தொகை நிரந்தரமாக ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த MAVEN AI திட்டமானது, தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய அனைத்து பிரிவுகளிலும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது முன்னேற்றமாக பார்க்கப்பட்டாலும், மனிதர்களின் தலையீடு இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மனித இலக்குகளை குறி வைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் இதற்கு கவலை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.