;
Athirady Tamil News

பம்பர குளவி கொட்டி நபர் ஒருவர் உயிரிழப்பு

0

சாமிமலை பகுதியில் இன்று மதியம் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் சாமிமலை ஹொரன பெருந்தோட்ட மார்க்கத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கணகரட்னம் எனும் 36 வயதுடையவர் ஆவார்.

இன்று மதியம் தான் வளர்க்கும் பசுவிற்கு புல் வெட்டி கொண்டு குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற வேளையில் அதிக விஷமுள்ள பம்பர குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மஸ்கெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.