;
Athirady Tamil News

இயந்திரத்தில் தீப்பிடிக்கும் அபாயம் ; அவசரத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

0

புதுடெல்லியிலிருந்து, இந்தூர் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அவசரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இந்தூருக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வலது இயந்திரத்தில் தீப்பற்றி எரியும் அபாயம் நிலவியதால் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார்.

தொழில்நுட்பக் கோளாறு
விமானம் தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை விமானி பத்திரமாகத் தரையிறக்கினார்.

விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். அதைத் தொடர்ந்து பயணிகளுக்குத் தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.

மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.