;
Athirady Tamil News

Halo Trust நிறுவனத்திற்கு மாவட்ட செயலர் பாராட்டு

0

Halo Trust நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வரும் சேப்பா (Centre for Poverty Analysis) நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் மொஹட் முனாஸ் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, Halo Trust நிறுவனம் 2002 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருவதாகவும், மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடிகள் இல்லை என்ற உறுதிப்படுத்தல்களை வழங்கிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், யாழ்ப்பாண மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு நிறுவனத்தின் பங்களிப்புக்கள் காத்திரமாக அமைந்திருந்தது எனவும் மாவட்ட செயலர் குறிப்பிட்டார்.

இச் சந்திப்பில் மேலதிக செயலர் (நிர்வாகம்)கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா.ஜெயகரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந. தயாபரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.