;
Athirady Tamil News

ட்ரம்புக்கு சீனாவிலிருந்து சென்ற தகவல் ; இவற்றால் போருக்கு தீர்வு காண முடியாது

0

வரி விதிப்பதாலோ, பொருளாதார தடை விதிப்பதாலோ போருக்கு தீர்வு காண முடியாது. அவை பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போர் முடியும் வரை சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரிகள் விதிப்பது உள்ளிட்ட ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விரிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘நேட்டோ’ நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

போர் பிரச்சினைகளை தீர்க்க முடியாது
இதற்கு பதில் அளித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறியதாவது: போர் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வரி விதிப்பதும் பொருளாதாரத் தடை விதிப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

போர் பிரச்சினையை தீர்ப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது. நாங்கள் போர்களில் பங்கேற்கவோ, திட்டமிடவோ இல்லை. அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது. சீனாவும், ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இருக்காமல், நண்பர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு வாங் யி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.