;
Athirady Tamil News

பத்தாம் வகுப்பு மாணவனால் பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக் ; விசாரணையில் வெளியான பின்னணி

0

அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில், பதினைந்து வயது பாடசாலை மாணவர் ஒருவர், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அம்பலங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மாணவரின் தொலைபேசியை சோதனை செய்தபோது, ​​பிரபல பாதாள உலகத் தலைவரான ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஈஷி கேஸ் முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரகசிய தகவல்
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்தேக நபரைச் சோதனையிட்டபோது, ​​அவரிடமிருந்து 10 கிராம் மற்றும் 600 மில்லிகிராம் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவனுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, ஈஷி கேஷ் முறைப்படி விற்க தயாராக இருந்த போதைப்பொருள் பொதிகளை வைத்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் அம்பலங்கொட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.