;
Athirady Tamil News

சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

0

ஜெனீவா

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், “சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கொடூரமான மோதல் மற்றும் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

இந்தாண்டு ஜனவரி முதல் மே வரையான டிரோன் தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனை, நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதுமட்டுமின்றி, அங்கு பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும் அதிகரித்துள்ளன” என வருத்தம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.