;
Athirady Tamil News

நுவரெலியா – வெலிமடை வீதியில் பாரிய விபத்து

0

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வானம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று பிரேக் செயலிழந்து வீதியோரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காருடனும், கனரக வாகனத்திற்கு முன்பாக சென்றுக் கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப்புடனும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் நான்கு வாகனங்களும் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

தாழிறங்கிய பகுதியில் விபத்து ஏற்பட்டமையால் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவித்த இடத்தில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.