;
Athirady Tamil News

பாலர் பாடசாலைக்கு தீ வைத்த மூடர்கள்; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்

0

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூடகளின் இந்த செயலால் பாலர் பாடசாலையின் பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ட்டிக் கதிரைகள் மற்றும் மின் அளவையும் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உடனடியாக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தீ வைப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கையில்,

இந்த கோழைத்தனமான செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருபோதும் குற்றவாளிகள் தப்ப முடியாது. விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பாலர் பாடசாலையை எரித்தவர்கள் தொடர்பில் பிரதேச மக்கள் கடும் சினத்தை வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.