;
Athirady Tamil News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

0

கல்வியாளர்களின் திறன்களை மேம்படுத்த இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

• பாடத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, போதைப்பொருள் மற்றும் புகையிலை நிறுவனங்கள் யுவர்களை எப்படி குறிக்கோளாக்குகின்றன என்பதையும், அவர்களின் நடைமுறைகளை எதிர்கொள்வதற்கான வழிகளைப் புரிந்து கொள்வதாகும்.

• மூன்றாவது குறிக்கோள், சமூகங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, சமூக அளவில் பங்களிப்பை உருவாக்கும் திறன்களை வளர்ப்பதாகும். மாணவர்கள் இதன் மூலம் வெளிப்படையான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தலாம்.

இரண்டாம் கட்ட பாடத்திட்டத்தில் 7 அமர்வுகள் உள்ளன, இதில் மெய்நிகர் அமர்வுகள் மற்றும் பரிசீலனை அமர்வுகள் அடக்கம். துறை நிபுணர்கள் வழிகாட்டலுடன் அமர்வுகள் இடம்பெறும் என்றார்.

இங்கு உரையாற்றிய கலாநிதி றிஸ்வான், இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை மற்றும் இலங்கை ADIC இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி திட்டம் இன்று துஆரம்பிக்கின்றது என்றும் முதற் கட்டத்தில் சுமார் 35–40 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். என்றும்

இந்த திட்டம் மாணவர்களுக்கு புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகளைப் பற்றி அறிவு மற்றும் விழிப்புணர்வை அளிக்கிறது. எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்துடன் பணிபுரியும் போது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

முதற் கட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த பேராசிரியர் ஏ. றமீஸ், பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் எஸ்.எம். அயூப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இரண்டாம் கட்டம் இப்போது சிறப்பு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் மது பழக்கம் இன்று இலங்கை மட்டுமல்லாது உலகளாவிய அளவில் ஒரு பெரும் சவாலாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களுக்குள் உருவாக்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நிகழ்வின் இறுதியில் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான என். லும்னா நன்றியுரையாற்றினார்.
நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ADIC திட்ட அலுவலர் நிதர்ஷனா மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு, பல்கலைக்கழகத்தின் கல்வி, சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அத்தியாயமாக மட்டுமன்றி, இலங்கையில் ADIC முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு இயக்கத்துடன் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.