;
Athirady Tamil News

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும் நிபுணர் – ஒரு பெயருக்கு இத்தனை லட்சம் கட்டணமா?

0

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும் நிபுணர் இதற்காக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்.

பெயர் தேர்வு செய்யும் நிபுணர்
சில தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது முன்னோர் பெயரையோ, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயரையோ அல்லது கடவுள் பெயரையோ சூட்டுவார்கள்.

தற்போது சில பெற்றோர்கள் ஜாதகப்படி பெயர் சூட்டுகின்றனர். ஒரு சில பெற்றோர்களோ கார்த்திக், சுரேஷ், ஸ்வாதி,பிரியா என்ற பொதுவான பெயர்களை சூட்டுகின்றனர்.

ஆனால், அமெரிக்காவில் இதற்கென்றே பெயர் தேர்ந்தெடுக்கும் நிபுணர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், பெயரை தேர்வு செய்ய லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த 37 வயதான Taylor A. Humphrey என்பவர் இளவயதில் இருந்தே பெயர்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில்பகிர்ந்து வரும் நிலையில், தாய் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு, “நான் கொஞ்ச நாளாக இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்ந்து வருகிறேன், பிறப்புச் சான்றிதழில் கையெழுத்திடாவிட்டால் என்னை மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல விடமாட்டார்கள். உடனடியாக எனக்கு ஒரு பெயர் தேவை” என கேட்டார்.

ரூ.26.67 லட்சம் கட்டணம்
அப்போது இதை ஒரு முழுநேர தொழிலாக செய்யும் எண்ணம் அவருக்கு தோன்றியது. குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்க 200 டொலர் முதல் 30,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.26.67 லட்சம்) வரை கட்டணம் வசூலிக்கிறார்.

தற்போது வரை 500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

இதற்காக தன்னை அணுகும் வாடிக்கையாளர்களிடம் அவர்களது ஆளுமை, ஆர்வங்கள், விருப்பங்கள், வெறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.

மேலும், ஒவ்வொரு பெயரின் அர்த்தங்கள், பெயர் தோற்றம், எழுத்துப்பிழை மாறுபாடுகள், அதன் வரலாறு மற்றும் உள்ளிட்ட சில தனிப்பயனாக்கப்பட்ட பெயர் பரிந்துரைகளுடன் கூடிய எளிய மின்னஞ்சலை விரும்புவோர்களிடம் குறைந்தது 200 டொலர் கட்டணம் வசூலிக்கிறார்.

தனித்துவமான பெயரின் அழகியலை அடையாளம் காண்பது, “குழந்தைப் பெயர் பிராண்டிங்”, குடும்ப முன்னோர்களின் பெயர்களின் பட்டியலை உருவாக்க ஒரு மரபியலாளரைப்(genealogist) பெறுவது போன்ற கூடுதல் சேவைகளையும் வழங்குகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.