புங்குடுதீவு நுணுக்களில் இரண்டு வீட்டுத் திட்டத்துக்கு உதவி செய்த “தீர்ப்பாயம்” குழும லண்டன் மயூரன்.. (படங்கள்)
புங்குடுதீவு நுணுக்களில் இரண்டு வீட்டுத் திட்டத்துக்கு உதவி செய்த “தீர்ப்பாயம்” குழும லண்டன் மயூரன்.. (படங்கள்)
இலங்கை அரசின் வீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் புங்குடுதீவு தொழிளாளர்புரம் (நுனுக்கல்) பிரதேசத்தில் இரண்டு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
(அரச வீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் “பயனாளிகள் தாம் சொந்தமாக காணி வைத்திருப்பதுடன், அவர்கள் தமது செலவில் வீட்டுக்கான அத்திவாரமும் போட்டு, ஐந்து வரிக்கல்லும் வைத்துக்கட்டி அதனை அரசுக்கு காட்டிய பின்னரே அரசினால் மிகுதி வீட்டு வேலைக்கு என பதின்மூன்று இலட்சம் கட்டம்கட்டமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்”.)
புங்குடுதீவு தொழிளாளர்புரம் (நுனுக்கல்) பிரதேசத்தில் இரண்டு வீடுகள் அமைக்கப்படவுள்ள இரண்டு வீட்டின் பயனாளிகளும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதினால், ஊர்ப்பற்றாளனான “தீர்ப்பாயம்” வாட்ஸாப் குழுமத்தை சேர்ந்த லண்டனில் வதியும் திரு.மயூரன் பரமலிங்கம் அவர்கள் தமது செலவிலேயே “வீட்டுக்கான அத்திவாரமும் போட்டு, ஐந்து வரிக்கல்லும் வைத்துக்கட்டி கொடுக்க” முன்வந்து இரண்டு வாரத்துக்குளேயே அதனைப் பூர்த்தி செய்து உள்ளார். அதிலும் எதிர்கால மலை, வெள்ளம் ஆகியவற்றை மனதில் கொண்டு நிலத்தில் இருந்து சுமார் இரண்டு அடி உயரத்துக்கு அத்திவாரம் போட்டு, ஐந்து வரிக்கல்லும் வைத்துக்கட்டி கொடுத்துள்ளார். இதுக்கான செலவான சுமார் ஏழு இலட்சம் இலங்கை ரூபா திரு.மயூரன் குடும்பத்தின் சொந்தப்பணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு.பரமலிங்கம் மயூரன் ஊர் சார்ந்து பல நல்ல சேவைகளை நீண்டகாலமாக செய்து வரும் ஊர்ப்பற்றாளன். அவருக்கும், இதுக்காக பாடுபட்ட அனைவருக்கும், *உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்கள்* தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை தாயின் பிறப்பிடமாகவும், கிழக்கூரை தந்தையின் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு கிழக்கூரில் வாழ்ந்து இப்போது லண்டனில் வதியும் ஊர்ப்பற்றாளனும் “தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும” உறுப்பினர்களில் ஒருவருமான திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினாலும், அவரது நிதிப் பங்களிப்பிலும் மேற்படி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
“மக்கள் சேவையே, மகேசன் சேவை” 👍👍👍🙏




















