;
Athirady Tamil News

தவெக எம்எல்ஏக்களை சென்னையிலே தங்க வைக்க திட்டம் – விஜய் முக்கிய ஆலோசனை

0

பதவியேற்பு விழா முடியும் வரை தவெக எம்எல்ஏக்களை சென்னையிலே தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உருவெடுத்துள்ளது.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை (118 தொகுதிகள்) கிடைக்காத நிலையில், கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய நிலை தவெகவிற்கு உள்ளது.

இந்நிலையில், வெற்றிக்கு பின்னர் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய் கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களும் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தவெகவின் சட்டமன்ற தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் தங்க வைக்க திட்டம்
ஆட்சியமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்ற நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் வரை, தவெக எம்எல்ஏக்களை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திரத்தில் தங்க வைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.