;
Athirady Tamil News

நாளை முதலமைச்சராகும் விஜய் ; திமுகவிலிருந்து தாவும் காங்கிரஸ்

0

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழுவின் கூட்டம் நேற்று நள்ளிரவில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

முக்கியமான நிபந்தனை
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஆதரவு வழங்க முன்வந்தாலும், தவெக-வுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அல்லது அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை எக்காரணம் கொண்டும் தவெக பெறக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும்.

மதச்சார்பற்ற கொள்கையுடைய கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே விஜய் தனது ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளைத் தள்ளிவைத்து விட்டு, மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வெளிவரவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.