தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் (05.10.2025) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






