;
Athirady Tamil News

நயினாதீவில் மக்கள் கண்ட காட்சி; வியப்பில் ஆரவாரம்

0

வரலாறு பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினை நாகபூஷணி அம்பாளின் இராஜகோபுரத்தின் மேலாக தோன்றிய மிகப் பெரிய வானவில் மக்களை வியப்பி ஆழ்த்தியுள்ளது. நேற்றையதினம் இந்த வானவில் தோன்றியுள்ளது.

இந்த வானவில்லானது நயினை அம்மனின் ராஜகோபு அழகை மேலும் அழகாக்கியுள்ளது. நயினை நாகபூஷணி அம்மனிற்கு அழகூட்டிய வானவில் தோன்றிய காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.


யாழ்ப்பாணத்தை அமைந்துள்ள நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம் ஈழத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்களுள் ஒன்றாகும். நாகம் பூசித்ததால் நாகபூஷணி என நாமாவளி அம்மனுக்கு ஏற்பட்டதாக அலய வரலாருகள் கூறுகின்றன.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்காய் அமைந்துள்ள நயினை தாய் ஈழ வரலாற்றில் பெரும் புகழ் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.