மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றமப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. எனவே சார்லசுக்கு 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவரது தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கீழ் கோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து சார்லசுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.