யாழ்–பளை வீதியில் பயங்கர விபத்து ; ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், விபத்திற்குள்ளாகியுள்ளது
டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பளை காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.